யூபிலி ஆண்டு சிறப்பு நிகழ்வாக அளம்பில் பங்கு மறைக்கல்வி மாணவர்கள், மறையாசிரியர்கள் மற்றும் பெற்றோர் இணைந்து முன்னெடுத்த சிறப்பு நிகழ்வு கார்த்திகை மாதம் 25ஆம் திகதி கடந்த செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

பங்குத்தந்தை அருட்தந்தை எமில் போல் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் இடம்பெற்ற இந்நிகழ்வில் மாணவர்கள், மறையாசிரியர்கள் மற்றும் பெற்றோர் முல்லைத்தீவு பிரதேசத்திலுள்ள சாம்றொக் குடும்ப நிலையத்திற்கு சென்று அங்குள்ள விசேட தேவையுடைய பிள்ளைகளை சந்தித்து மகிழ்வூட்டல் நிகழ்வுகள், கலைநிகழ்வுகள் என்பவற்றை நிகழ்த்தியதோடு தாம் சேகரித்த பணத்தில் வாங்கிய பரிசுப்பொருட்களையும் அவர்களுடன் பகிர்ந்துகொண்டனர்.

இந்நிகழ்வில் 57 மாணவர்களும் 07 மறையாசிரியர்களும் 13 பெற்றோரும் பங்குபற்றியிருந்தனர்.

By admin