தீவகம் அல்லைப்பிட்டி புனித யுவானியார் ஆலய வருடாந்த திருவிழா தீவக மறைக்கோட்ட முதல்வரும் பங்குத்தந்தையுமான அருட்தந்தை பேனாட் றெக்னோ அவர்களின் ஒழுங்குபடுத்தலில் ஆவணி மாதம் 29ஆம் திகதி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
20ஆம் திகதி புதன்கிழமை கொடியேற்றத்துடன் ஆயத்தநாள் வழிபாடுகள் ஆரம்பமாகி 28ஆம் திகதி வியாழக்கிழமை நற்கருணைவிழா இடம்பெற்றது.
திருவிழா திருப்பலியை யாழ். புனித மடுத்தீனார் சிறிய குருமட அதிபர் அருட்தந்தை செல்வரட்ணம் அவர்களும் நற்கருணைவிழா திருப்பலியை நாரந்தனை பங்குத்தந்தை அருட்தந்தை அந்தோனிப்பிள்ளை அவர்களும் தலைமைதாங்கி ஒப்புக்கொடுத்தனர்.