அமலமரித்தியாக்கிகள் சபை மூத்தகுரு அருட்தந்தை லூயிஸ் பொன்னையா அவர்களின் 95ஆவது அகவை தின நிகழ்வு ஆவணி மாதம் 22ஆம் திகதி வெள்ளிக்கிழமை கொழும்புத்துறை புனித பிரான்சிஸ் சவேரியார் உயர் குருத்துவ கல்லூரியில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் குருமட சிற்றாலயத்தில் அருட்தந்தை லூயிஸ் பொன்னையா அவர்களின் தலைமையில் நன்றி திருப்பலியும் தொடர்ந்து பிறந்ததின நிகழ்வுகளும் இடம்பெற்றன.

இந்நிகழ்வில் அருட்தந்தையர்கள், அருட்சகோதரிகள் மற்றும் அருட்தந்தையின் உறவினர்கள் கலந்து அருட்தந்தையின் பணிவாழ்விற்காக நன்றிகூறி செபித்தனர்.

By admin