யாழ். மறைமாவட்ட குருவும் சக்கோட்டை பங்குத்தந்தையுமான அருட்தந்தை யோண்பிள்ளை பஸ்ரியன் ஜோதிநாதன் அவர்களின் குருத்துவ 25வது ஆண்டு யூபிலி நிகழ்வு ஆகஸ்ட் மாதம் 02ஆம் திகதி சனிக்கிழமை சில்லாலை புனித கதிரைமாதா ஆலயத்தில் பங்குத்தந்தை அருட்தந்தை லியோ ஆம்ஸ்ரோங்க் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்றது.
இந்நிகழ்வின் ஆரம்பத்தில் அருட்தந்தை யோண்பிள்ளை பஸ்ரியன் ஜோதிநாதன் அவர்கள் ஆலய வீதியிலிருந்து பாண்ட் வாத்தியங்களுடன் ஆலயத்திற்கு அழைத்துவரப்பட்டார்.
தொடர்ந்து அருட்தந்தை அவர்களின் தலைமையில் நன்றித்திருப்பலியும் யூபிலி நிகழ்வுகளும் அங்கு இடம்பெற்றன.
இந்நிகழ்வில் யாழ். மறைமாவட்ட குருமுதல்வர் அருட்தந்தை ஜெபரட்ணம், குருக்கள், துறவிகள், அருட்தந்தையின் குடும்ப உறவினர்களென பலரும் கலந்து செபித்தனர்.