மன்னார் வங்காலை புனித அன்னாள் ஆலயத்தில் வைத்து இலங்கை அரச படையினரால் சுட்டுப் படுகொலை செய்யப்பட்ட அருட்தந்தை மேரி பஸ்ரியன் அவர்களின் 41ஆவது ஆண்டு நினைவாக வங்காலை புனித அன்னாள் ஆலய முன்பள்ளியில் முன்னெடுக்கப்பட்ட இரத்ததான முகாம் தை மாதம் 11ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

பஸ்ரியன் சமூக முன்னேற்ற கழகத்தின் ஏற்பாட்டில் வங்காலை புனித அன்னாள் ஆலய பங்குத்தந்தை அருட்தந்தை லக்கோண்ஸ் பிகுறாடோ அவர்களின் வழிநடத்தலில் இடம்பெற்ற இந்நிகழ்வில் 78 வரையான குருதிக்கொடையாளர்கள் கலந்து இரத்ததானம் வழங்கியிருந்தார்கள்.

அருட்தந்தை மேரி பஸ்ரியன் அவர்களின் நினைவாக குருதிக்கொடை முகாமில் கலந்து இரத்ததானம் வழங்கியவர்களுக்கு மரக்கன்றுகளும் வழங்கிவைக்கப்பட்டன.

By admin