போர்டோவின் திருக்குடும்ப கன்னியர் சபை அருட்சகோதரி மார்த்தா அவர்களின் 100ஆவது அகவை தின நிகழ்வு யூலை மாதம் 25ஆம் திகதி வெள்ளிக்கிழமை பாசையூர் திருக்குடும்ப கன்னியர் மடத்தில் நடைபெற்றது.
கன்னியர் சபை யாழ். மாகாண குழுவின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்ற இந்நிகழ்வில் யாழ். மறைமாவட்ட குருமுதல்வர் அருட்தந்தை ஜெபரட்ணம் அவர்களின் தலைமையில் நன்றி திருப்பலியும் தொடர்ந்து பிறந்ததின நிகழ்வுகளும் இடம்பெற்றன.
அருட்சகோதரியின் பணிவாழ்விற்கான இறைவனுக்கு நன்றிகூறி இவரின் சுகவாழ்விற்காகவும் மன்றாடுவோம்.