அமலமரித்தியாகிகள் உயர் கல்லூரியின் ஆறாவது பரசளிப்பு விழா மார்கழி மாதம் 06ஆம் திகதி சனிக்கிழமை வைத்தியசாலை வீதியில் அமைந்துள்ள தொடர்பக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

கல்லூரி இயக்குநர் அமலமரித்தியாகிகள் சபை அருட்தந்தை ஜீவேந்திரா போல் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் யாழ். பல்கலைக்கழக கிஸ்தவ நாகரிகத்துறை கல்லூரி மாணவர்கள், டி மசனெட் கம்பஸ் மாணவர்கள் மற்றும் கிளிநொச்சி அன்னை இல்ல மாணவர்களென 48 பேர் ஆங்கில மொழி மற்றும் சிங்கள மொழி டிப்ளோமா கற்கைநெறிகளுக்கான சான்றிதழ்களை பெற்றுக்கொண்டனர்.

யாழ். பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிசியர் ஸ்ரீ சற்குணராஜா அவர்கள் பிரதம விருந்தினராக கலந்து சிறப்பித்த இந்நிகழ்வில் அமலமரித்தியாகிகள் சபை யாழ். மாகாண முதல்வர் அருட்தந்தை போல் ஜெயந்தன் பச்சேக், யாழ். பல்கலைக்கழக கிறிஸ்தவ நாகரிகத்துறை தலைவர் பேராசிரியர் அருட்தந்தை போல் றொகான், யாழ். பல்கலைக்கழக கிறிஸ்தவ நாகரிகத்துறை சிரேஸ்ட விரிவுரையாளர் வினிபிறீடா மற்றும் அருட்தந்தையர்கள், அருட்சகோதரிகளென பலரும் கலந்துகொண்டனர்.

கல்லூரியின் புதிய கல்வியாண்டு கற்கைநெறிகள் வருகின்ற 2026ஆம் ஆண்டு தை மாதம் முதற்கிழமை ஆரம்பமாகவுள்ளமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.

By admin