யாழ். மறைமாவட்ட அன்பிய ஆணைக்குழுவின் ஏற்பாட்டில் உருத்திரபுரம் பங்கில் முன்னெடுக்கப்பட்ட அன்பிய ஊக்குவிப்பாளர்கள் மற்றும் மறையாசிரியர்களுக்கான சிறப்பு நிகழ்வு ஆகஸ்ட் மாதம் 08ஆம் திகதி வெள்ளிக்கிழமை உருத்திரபுரம் புனித பற்றிமா அன்னை ஆலயத்தில் நடைபெற்றது.
பங்குத்தந்தை அருட்தந்தை யோன் கனீசியஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்ற இந்நிகழ்வில் காலை மறையாசிரியர்களுக்கான சிறப்புரையும் தொடர்ந்து மாலை அன்பிய ஊக்குவிப்பாளர்களுக்கான கருத்தமர்வும் இடம்பெற்றன.
இந்நிகழ்வுகளை யாழ். மறைமாவட்ட அன்பிய ஆணைக்குழு இயக்குநர் கிளறேசியன் சபை அருட்தந்தை ஜோய் மரியரட்ணம் அவர்கள் நெறிப்படுத்தினார்.
இந்நிகழ்வில் 40ற்கும் அதிகமான அன்பிய ஊக்குவிப்பாளர்களும் 30 வரையான மறையாசிரியர்களும் பங்குபற்றி பயனடைந்தனர்.