கொழும்புத்துறை புனித பிரான்சிஸ் சவேரியார் உயர் குருத்துவ கல்லூரியில் இயங்கிவரும் அன்னை திரேசா சமூக சேவை குழுவின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்ட இரத்ததான நிகழ்வு கார்த்திகை மாதம் 21ஆம் திகதி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
கல்லூரியின் ஜோய் கிறிசோஸ்தம் மண்டபத்தில் இடம்பெற்ற இவ்இரத்ததான முகாமில் குருமட மாணவர்கள், பணியாளர்களென 25ற்கும் அதிகமான குருதிக்கொடையாளர்கள் கலந்து இரத்ததானம் வழங்கியிருந்தார்கள்.

