அனுராதபுரம் மறைமாவட்டத்தின் புதிய ஆயராக நற்கருணைநாதர் சபை அருட்தந்தை நி~hந்த சாகர ஜெயமான்ன அவர்கள் திருத்தந்தை 14ஆம் லியோ அவர்களால் நியமனம் பெற்றுள்ளார்.
தனது மெய்யியல் மற்றும் இறையியல் கல்வியை கண்டி அம்பிட்டிய தேசிய குருமடத்திலும் மெய்யியலில் முதுமானிப்பட்டத்தை இத்தாலி உரோமாபுரியில் அமைந்துள்ள ஆஞ்சலிக்கும் பல்கலைக்கழகத்திலும் பயின்று 2000ஆம் ஆண்டு குருவாக திருநிலைப்படுத்தப்பட்ட இவர் நற்கருணை நாதர் சபை நிதியாளர் மற்றும் முதல்வராகவும் பணியாற்றியுள்ளார்.
அத்துடன் மாத்தளை புனித தோமையார் ஆலயம் மற்றும் புனித பிலிப்பிநேரியார் ஆலய பதில் பங்குத்தந்தையாகவும், உதவி நவசன்னியாச அதிபராகவும், கங்வெல்ல நவசன்னியாச அதிபராகவும், பெற்றா குழுமத்தின் நிதியாளராகவும் கங்வெல்ல எய்மாட் கம்பெல் ஆன்மீக பயிற்சி இல்ல இயக்குநராகவும், கண்டி தேசிய குருமடத்தில் மெய்யியல் பாட விரிவுரையாளராகவும், கண்டி அம்பிடிய நற்கருணை நாதர் சபை குருமடத்தின் அதிபராகவும் பணியாற்றியுள்ளார்.
தற்போதைய ஆயர் பேரருட்தந்தை நோபட் அந்த்ராடி அவர்களின் ஓய்வு காரணமாக நற்கருணைநாதர் சபை மாகாண குருமுதல்வராக பணியாற்றி வந்த இவர் அனுராதபுரம் மறைமாவட்ட ஆயராக திருத்தந்தையால் நியமிக்கப்பட்டுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.
