யாழ்ப்பாணம் அந்திரான் புனித வேளாங்கன்னி அன்னை ஆலயத்தில் மார்கழி மாதம் 06ஆம் திகதி சனிக்கிழமை இடி மின்னல் தாக்கம் ஏற்பட்டு ஆலய குவிமாடம், கூரை மற்றும் மர இருக்கைகள் சேதமடைந்த நிலையில் அவ்வாலய புனிதப்படுத்தல் நிகழ்வு மார்கழி மாதம் 18ஆம் திகதி கடந்த வியாழக்கிழமை நடைபெற்றது.

பங்குத்தந்தை அருட்தந்தை அருட்செல்வன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் இடம்பெற்ற இந்நிகழ்வில் காலை திருப்பலியுடன் நற்கருணை எழுந்தேற்றம் செய்யப்பட்டு தொடர்ந்து மாலை நற்கருணை ஆராதனை, பவனி என்பனவற்றுடன் அன்பிய பகிர்வும் இடம்பெற்றன.

புனிதப்படுத்தல் திருப்பலியை பங்குத்தந்தை அவர்கள் தலைமைதாங்கி ஒப்புக்கொடுத்தார்.

By admin