யாழ்ப்பாணம் மணியந்தோட்டம் பிரதேசத்தில் சலேசிய டொன் போஸ்கோ சபை அருட்சகோதரிகளால் நடாத்தப்பட்டுவரும் அக்சீலியம் ஆங்கில மொழி பாடசாலையின் 2026ஆம் ஆண்டு கல்வியாண்டிற்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.
பாலர் வகுப்பு முதல் உயர்தரம் வரையான வகுப்புகளில் மாணவர்களை சேர்க்க விரும்புவோர் அதற்கான விண்ணப்ப படிவங்களை பாடசாலை நாட்களில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை பாடசாலை அலுவலகத்தில் பெற்றுக்கொள்ள முடியுமெனவும் புதிதாக பாடசாலையில் இணைந்துகொள்ளும் மாணவர்களுக்கான போக்குவரத்து வசதிகள் செய்து தரப்படுமெனவும் பாடசாலை அதிபர் அருட்சகோதரி அலெக்ஸ்சாண்டர் லில்லி றோஸ் அவர்கள் nதிவித்துள்ளார்.
இது தொடர்பான மேலதிக தகவல்களை 0702635747 என்ற தொலைபேசி இலக்கத்தின் ஊடாக பெற்றுக்கொள்ள முடியும்.
இப்பாடசாலையில் இலங்கை கல்வி அமைச்சின் பாடத்திட்டத்திற்கமைய பாலர் வகுப்பு முதல் உயர்தரம் வரை ஆங்கில மொழிக்கல்வி, விளையாட்டு பயிற்சிகள், சதுரங்கம், யூ சி மாஸ் (UCMAS) மனக்கணித வகுப்புகள் எலக்கூசன் (Elocution) மற்றும் கேம்பிரிட்ஜ் வகுப்புகள் (Cambridge) போன்ற இணைப்பாடவிதான செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருவதுடன் தற்போது 110 வரையான மாணவர்கள் இப்பாடசாலையில் கல்வி பயின்றுவருவதும் இங்கு குறிப்பிடத்தக்கது.