அக்கராயன் பங்கில் முன்னெடுக்கப்பட்ட வீதி சிலுவைப்பாதை தியானம் பங்குனி மாதம் 27ஆம் திகதி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
பங்குத்தந்தை அருட்தந்தை அல்பேன் சேகர் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் இடம்பெற்ற சிலுவைப்பாதை தியானம் ஸ்கந்தபுரம் புனித அந்தோனியார் ஆலயத்தில் ஆரம்பமாகி வைத்தியசாலை ஊடாக அக்கராயன் சந்தி மருதமடு அன்னை திருச்சொருபத்தை சென்றடைந்து அங்கு இடம்பெற்ற திருப்பலியுடன் நிறைவடைந்தது.

