அமலமரித்தியாகிகள் சபை யாழ். மாகாண மறையுரைஞர் குழுமத்தினால் அக்கராயன்குளம் பங்கில் முன்னெடுக்கப்பட்ட தவக்கால தியானமும் குணமாக்கல் வழிபாடும் பங்குனி மாதம் 04ஆம் திகதி புதன்கிழமை நடைபெற்றது.
பங்குத்தந்தை அமலமரித்தியாகிகள் சபை அருட்தந்தை அல்பேன் சேகர் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் இடம்பெற்ற இத்தியானத்தில் திருப்பலி, தர்க்கப்பிரசங்கம், நற்கருணை வழிபாடு, ஒப்புரவு அருட்சாதனம் என்பன இடம்பெற்றன.
திருப்பலியை அமலமரித்தியாகிகள் சபை அருட்தந்தை றெமோசன் அவர்கள் தலைமைதாங்கி ஒப்புக்கொடுத்தார்.
இத்தியானத்தில் பங்குமக்கள் பக்தியுடன் பங்குபற்றியிருந்தனர்.

