திருமுழுக்கினால் சாட்சிய வாழ்வுக்கு அழைக்கப்பட்டு மறை, உண்மை, நீதிக்காக வாழ்ந்து மரணித்த வெள்ளை, சிவப்பு மற்றும் பச்சை வேதசாட்சிகளை உண்மையின் வீரர்களாக பிரகடணப்படுத்தகோரி கையெழுத்து பிரச்சாரம் யாழ். மறைமவாட்டத்தில் ஆரம்பிக்க ஏற்பாடுகள் முன்னெடுக்கப்படவுள்ளது.

சிவப்பு மறைசாட்சிகள் என்று அழைக்கப்படும் மனித உரிமைகள், அடக்குமுறைகளுக்கு எதிராக குரல்கொடுத்து கலாபனைகள் மற்றும் போரினால் இரத்தம் சிந்தி இறந்தவர்களையும் வெள்ளை வேதாசாட்சிகள் என்று அழைக்கப்படும் குடும்பம், சுய விருப்பம், பொருள்பற்று என்பவற்றை துறந்து ஞானவாழ்வில் தம்மை முழுமையாக அர்ப்பணித்தவர்களையும் பச்சை வேதசாட்சிகள் என்று அழைக்கப்படும் புனிதத்துவம், நம்பிக்கை மற்றும் நேர்மைக்காக தங்களை அர்ப்பணித்து சாதியம், பெண் அடக்குமுறை போன்றவற்றிற்காக போராடியவர்களையும் உண்மையின் வீரர்களாக பிரகடணப்படுத்த இப்பிரச்சாரம் முன்னெடுக்கப்படவுள்ளது.

இதன் மூலம் பெறப்படும் கையெழுத்துக்கள் வடக்;கு கிழக்கு கத்தோலிக்க திருச்சபை ஆயர் மன்றத்தின் மூலம் இலங்கை ஆயர் மன்றத்திற்கு சமர்ப்பிக்கப்பட்டு அவர்கள் ஊடாக வத்திக்கானிற்கு அனுப்பி மேற்குறித்த பிரகடணத்தை ஏற்றுக்கொள்ளும்படி கோரிக்கை விடுக்கப்படவுள்ளது.

யூபிலி ஆண்டு சிறப்பு நிகழ்வாக மறைந்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் வழிகாட்டலில் இதற்கான சந்தர்பம் வத்திக்கானில் ஏற்படுத்தப்பட்டடுள்ளமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.

By admin