மன்னார் மறைமாவட்ட இளையோர் ஆணைக்குழு இயக்குனர் அருட்தந்தை விக்டர் சோசை அவர்களின் ஒழுங்குபடுத்தலில் வவுனியா மறைக்கோட்டத்தில் இளையோரை ஒன்றிணைத்து முன்னெடுக்கப்பட்ட செபமாலை பேரணி 14ஆம் திகதி கடந்த ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றது.
வவுனியா வேப்பங்குளம் புனித சூசையப்பர் ஆலயத்தில் ஆரம்பமாகிய இச்செபமாலை பேரணி இறம்பைக்குளம் புனித அந்தோனியார் ஆலயத்தை சென்றடைந்து அங்கு திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டது.
அன்னையின் வணக்கமாதமாகிய இம்மாதத்தில் முன்னெடுக்கப்பட்ட இச்சிறப்பு பேரணியில் வவுனியா மறைக்கோட்ட பங்குகளிலிருந்து ஏராளமான இளையோர் மிகவும் பக்தியோடு பங்குபற்றினார்கள்.

By admin