வலைஞர்மடம் புனித செபமாலை அன்னை ஆலய வருடாந்த திருவிழா பங்குத்தந்தை அருட்தந்தை டெனிசியஸ் அவர்களின் தலைமையில் 27ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
18ஆம் திகதி வெள்ளிக்கிழமை கொடியேற்றத்துடன் ஆயத்தநாள் வழிபாடுகள் ஆரம்பமாகி நடைபெற்று வந்த நிலையில் 26ஆம் திகதி நற்கருணை விழா இடம்பெற்றது.
திருவிழாத் திருப்பலியை யாழ். மறைமாவட்ட ஆயரின் செயலர் அருட்தந்தை றெக்சன் அவர்களும் திருவிழாத் திருப்பலியை யாழ். மறைமாவட்ட நிதி முகாமையாளர் அருட்தந்தை நேசநாயகம் அவர்களும் தலைமை தாங்கி ஒப்புக்கொடுத்தனர்.
திருவிழாத் திருப்பலி நிறைவில் அன்னையின் திருச்சுருப பவனியும், ஆசிரும் இடம்பெற்றது.
இத்திருப்பலியில் யாழ். மறைமாவட்டத்தின் பல பங்குகளிலிருந்தும் அதிகளவான இறைமக்கள் இணைந்து செபித்தனர்.

By admin