இயேசுவின் பாடுகள், மரணம், உயிர்ப்பை யதார்த்த வாழ்வியலோடு சித்தரிக்கும் “வலியோடு ஓரு பயணம்” என்னும் சிலுவைப்பாதை நூல் வெளியீடு 13ஆம் திகதி கடந்த ஞாயிற்றுக்கிழமை உரும்பிராய் புனித மிக்கேல் ஆலயத்தில் இடம்பெற்றது.

உரும்பிராய் பங்குதந்தை அருட்திரு அருட்செல்வன் அவர்களின் முயற்சியில் உருவான இந்நூலின் முதற்பிரதியை நூலாசிரியரிடமிருந்து யாழ் மறைமாவட்டக் குருமுதல்வர் அருட்திரு ஜெபரட்ணம் அவர்கள் பெற்றுக் கொண்டார். இந்நிகழ்வில் இளவாலை மறைக்கோட்ட முதல்வர் அருட்திரு ஜெயக்குமார் அவர்களும் மற்றும் குருக்கள் அருட்சகோதரிகள் பங்கு மக்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

By admin