போர்தோவின் திருக்குடும்ப சபையின் யாழ் மாகாணத்தைச் சேர்ந்த 23 அருட்சகோதரிகள் தங்களது துறவற வார்த்தைப்பாட்டின் 70வது 60வது மற்றும் 25வது வருட யூபிலி ஆண்டு நிறைவை 19ஆம் திகதி கடந்த ஞாயிற்றுக்கிழமை கொண்டாடினார்கள்.

இளவாலை திருக்குடும்பக் கன்னியர் மடத்தில் இடம்பெற்ற இவ்யுபிலி நிகழ்வில் யாழ் மறைமாவட்ட ஆயர் பேரருட்திரு யஸ்ரின் பேணாட் ஞானப்பிரகாசம் அவர்கள் தலைமைதாங்கி யூபிலி நன்றித்திருப்பலியை ஓப்புக்கொடுத்தார். திருப்பலியை தொடர்ந்து யூபிலி நிகழ்வுகளுடன் அருட்சகோதரிகளின் கிறிஸ்மஸ் ஒன்று கூடலும் அங்கு இடம்பெற்றது.

By admin