யாழ். மாவட்ட பாடசாலைகள் விளையாட்டு சங்கத்தின் ஏற்பாட்டில் மாகாணரீதியாக முன்னெடுக்கப்பட்ட 20 வயதுப்பிரிவினருக்கான காற்பந்தாட்ட இறுதிபோட்டி 30ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை அரியாலை காற்பந்தாட்ட பயிற்சி மைதானத்தில் நடைபெற்றது.
 
யாழ். புனித பத்திரிசியார் கல்லூரிக்கும் இளவாலை புனித ஹென்றியரசர் கல்லூரிக்கும் இடையே நடந்த இறுதிப்போட்டியில் புனித பத்திரிசியார் கல்லூரி முதலாம் இடத்தையும் புனித ஹென்றியரசர் கல்லூரி இரண்டாம் இடத்தையும் பெற்று யாழ். புனித பத்திரிசியார் கல்லூரி அணி சம்பியன் பட்டத்தை வென்றது.
 
இக்காற்பந்தாட்ட தொடரின் சிறந்த காற்பந்தாட்ட வீரனாக புனித பத்திரிசியார் கல்லூரி மாணவன் செல்வன் ஜெறோம் தெரிவுசெய்யப்பட்டார். லண்டன் தமிழ் பாடசாலைகள் சங்கத்தின் அனுசரணையில் முன்னெடுக்கப்பட்ட இப்போட்டிகளுக்கு வடமாகாண கல்விப்பணிப்பாளர் திரு. ஜோண் குயின்ரஸ் அவர்கள் பிரதம விருந்தினராகக் கலந்து வெற்றிபெற்ற வீரர்களுக்கான பதக்கங்களையும் வெற்றிக்கிண்ணத்தையும் வழங்கிவைத்தார்.

By admin