யாழ். மறைமாவட்ட மறையாசிரியர்களுக்கான கிறிஸ்மஸ் ஒன்றுகூடல் நிகழ்வு 10ஆம் திகதி சனிக்கிழமை யாழ். புனித பத்திரிசியார் கல்லூரியில் அமைந்துள்ள மத்தியூஸ் மண்டபத்தில் நடைபெற்றது. மறைக்கல்வி நடுநிலைய இயக்குனர் அருட்தந்தை ஜேம்ஸ் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பலாலி-ஊறணிப் பங்குத்தந்தை அருட்தந்தை தேவராஜன் அவர்கள் பிரதம விருந்தினராகவும், யாழ் மறைமாவட்ட நிதி முகாமையாளர் அருட்தந்தை நேசநாயகம் அவர்கள் சிறப்பு விருந்தினராகவும் கலந்துகொண்டார்கள்.

இவ்வொன்றுகூடலில் மறையாசிரியர்களின் கலை நிகழ்வுகளும், 2021, 2022ஆம் ஆண்டுகளில் திருவிவிலியம், கட்டுரை மற்றும் பேச்சு போட்டிகளில் முதல்நிலையைப் பெற்ற மாணவர்களுக்கான கௌரவிப்பும், நிரந்தர மறையாசிரியராக 50 வருடங்கள் பணியாற்றிய மறையாசிரியர் திரு ஜெயசீலன் அவர்களின் சேவை நலன் பாராட்டும் இடம்பெற்றன

.

By admin