யாழ். மறைமாவட்ட குருவும் வன்னி கரித்தாஸ் கியூடெக் நிறுவனத்தின் முன்நாள் இயக்குனருமாகிய அருட்தந்தை பீற்றர் அவர்கள் 19ஆம் திகதி புதன்கிழமை இறைவனடி சேர்ந்துள்ளார்.
இவர் யாழ். மறைமாவட்டத்தின் யாழ் புனித மரியன்னை பேராலயம் மற்றும் மாரீசன்கூடல் பங்குகளின் உதவிப்பங்குத்தந்தையாகவும் மிருசுவில், குமிழமுனை, நாரந்தனை ( தீவக மறைக்கோட்ட முதல்வர் ) ஆகிய இடங்களில் பங்குத்தந்தையாகவும் பணியாற்றியதுடன் சுனாமி இடர் காலத்திலும் வன்னி யுத்தத்தின் ஆரம்ப காலங்களிலும் வன்னி கரித்தாஸ் கியூடெக் நிறுவனத்தின் இயக்குனராக இருந்து அளப்பெரிய சமூகப் பணிகளை ஆற்றியவர்.
அன்னாரின் பணிவாழ்வுக்காக நன்றிகூறி அவரின் ஆன்மா இறைவனில் அமைதிபெற மன்றாடுவோம்.

By admin