யாழ். மறைமாவட்ட குருக்களுக்கான பணிமாற்றங்கள் சில அண்மையில் நடைபெற்றுள்ளன.
இப்பணிமாற்றங்களில் அருட்தந்தை ரவிறாஜ் அவர்கள் புனித யோசவ்வாஸ் இறையியல் கல்லூரி இயக்குநராகவும் அருட்தந்தை பிறையன் அவர்கள் யாழ். மறைமாவட்ட இளையோர் ஒன்றிய இயக்குநராகவும் அருட்தந்தை செல்வரட்ணம் அவர்கள் புனித மாட்டீனார் சிறிய குருமட அதிபராகவும் அருட்தந்தை ஜெயறஞ்சன் அவர்கள் யாழ். பல்கலைக்கழக ஆன்மீக இயக்குநராகவும் நியமனம் பெற்றுள்ளனர்.
அத்துடன் அருட்தந்தை சுதர்சன் அவர்கள் யாழ். மறைமாவட்ட தகவல் வலைத்தள செயற்பாடுகளுக்கு பொறுப்பாகவும் அருட்தந்தை ஜேசுதாசன் சந்திரன் அவர்கள் மண்டைதீவு பங்குத்தந்தையாகவும் அருட்தந்தை அருள்நேசன் அவர்கள் திருநெல்வேலி பங்குத்தந்தையாகவும் அருட்தந்தை எமில் போல் அவர்கள் அளம்பில் பங்குத்தந்தையாகவும் அருட்தந்தை ஞானேந்நிரன் அவர்கள் நல்லூர் பங்குத்தந்தையாகவும் அருட்தந்தை கான்ஸ்போவர் அவர்கள் கூளாமுறிப்பு பங்குத்தந்தையாகவும் அருட்தந்தை அருள்தாசன் அவர்கள் ஒட்டகப்புலம் பங்குத்தந்தையாகவும் அருட்தந்தை பத்திநாதர் அவர்கள் நெடுந்தீவு பங்குத்தந்தையாகவும் அருட்தந்தை அலின் கருணாகரன் அவர்கள் மாரீசன்கூடல் பங்குத்தந்தையாகவும் அருட்தந்தை தயதீபன் அவர்கள் முழங்காவில் பங்குத்தந்தையாகவும் அருட்தந்தை யூட் கெமில்டன் அவர்கள் எழுவைதீவு பங்குத்தந்தையாகவும் நியமனம் பெற்றுள்ளதுடன் அருட்தந்தை பிலேந்திரன் மற்றும் அருட்தந்தை றெனால்ட் ஆகியோர் குருநகர் பங்கின் உதவி பங்குத்தந்தையர்களாகவும் அருட்தந்தை நியூமன் மற்றும் அருட்தந்தை ஜோண் கனீசியஸ் ஆகியோர் பேராலய உதவி பங்குத்தந்தையர்களாகவும் நியமனம் பெற்று தமது பணிப்பொறுப்புகளை ஏற்றுக்கொண்டுள்ளனர்.

By admin