யாழ். மறைமாவட்ட குருக்கள் சிலருக்கான பணிமாற்றங்கள் அண்மையில் நடைபெற்றுள்ளன. கிளிநொச்சி பங்கில் உதவிப் பங்குத்தந்தையாக பணியாற்றி வந்த அருட்தந்தை நிலான் யூலியஸ் அவர்கள் பூநகரிப் பங்குத்தந்தையாகவும் பூநகரிப் பங்குத்தந்தையாக பணியாற்றி வந்த அருட்தந்தை சுலக்சன் அவர்கள் வட்டக்கச்சி பங்குத்தந்தையாவும் மாற்றம் பெற்று பணிப்பொறுப்பை ஏற்றுக்கொண்டார்கள்.
மேலும் அண்மையில் குருவாக திருநிலைப்படுத்தப்பட்ட அருட்தந்தை ராஜ் டிலக்சன் அவர்கள் கிளிநொச்சிப் பங்கின் உதவிப் பங்குத்தந்தையாகவும் நியமனம் பெற்றுள்ளதுடன் கிளிநொச்சி பிரதேசத்தில் கற்பித்தல் பணியாற்றி வந்த அருட்தந்தை சதீஸ் அவர்கள் முல்லைத்தீவு பிரதேசத்திற்கும் முல்லைத்தீவில் பணியாற்றி வந்த அருட்தந்தை சோபன் அவர்கள் நெடுந்தீவு பிரதேசத்திற்கும் மாற்றலாகியும் சென்றுள்ளனர்.

By admin