யாழ் மறைமாவட்ட கத்தோலிக்க இளையோர் ஒன்றுகூடல் 19ம் திகதி கடந்த ஞாயிற்றுக்கிழமை யாழ். மறைநதி கத்தோலிக்க ஊடகமைய கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.

யாழ். மறைமாவட்ட இளையோர் ஆணைக்குழுவால் நடாத்தப்பட்ட இந்நிகழ்வில் யாழ் மறைமாவட்டத்தில் உள்ள 6 மறைக்கோட்டத்திலிருந்தும் 70 வரையான இளையோர் கலந்து கொண்டார்கள். காலை திருப்பலியோடு ஆரம்பமாகி மாலை நிறைவடைந்த இந்நிகழ்வில் தலைமைத்துவம் குழு செயற்பாட்டை மேப்படுத்தல், உலக ஆயர்கள் மாமன்ற தயாரிப்புக்கான பணியில் இளையோரின் வகிபாகம் அகிய வலுவூட்டல் உரைகள் மற்றும் கலந்துரையாடல் குழுசெயற்பாடுகள் என்பனவற்றுடன் மறைமாவட்ட இளையோர் ஒன்றிய செயற்குழுவுக்கான புதிய தெரிவும் இடம்பெற்றது. இந்நிகழ்வில் யாழ். மறைமாவட்ட குருமுதல்வர் அருட்திரு ஜெபரெட்ணம் அவர்களும் யாழ் போதனா வைத்தியசாலையின் உளவளத்துறை ஆலோசகர் திரு. நவராஜ் அவர்களும் கலந்து உரையாற்றியதுடன் திருமறைக்கலாமன்ற பிரதி இயக்குனர் திரு ஜோன்சன் றாஜ்குமார் அவர்களுடன் இணைந்த குழுவினர் வளவாளர்களாக கலந்து நிகழ்வை சிறப்பித்தனர்.
இந்நிகழ்வுகள் யாவும் யாழ் மறைமாவட்ட இளையோர் ஆணைக்குழு இயக்குனர் அருட்திரு அன்ரன் ஸ்ரிபன் அவர்களின் ஓழுங்குபடுத்தலிலும் வன்னி கியூடெக் கரிதாஸ் நிறுவனத்தின் உதவியுடனும் மிகவும் சிறப்பாக இடம்பெற்றுள்ளது.

By admin