நெதர்லாந்து நாட்டின் இலங்கைக்கான தூதரக துணைத் தலைவர் இவான் ருட்ஜென்ஸ் அவர்கள் யாழ். மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை யஸ்ரின் ஞானப்பிரகாசம் அவர்களை சந்தித்து கலந்துரையாடினார்.
 
இச்சந்திப்பு 08ஆம் திகதி வியாழக்கிழமை யாழ். மறைமாவட்ட ஆயர் இல்லத்தில் நடைபெற்றது.
 
அத்துடன் இந்தியாவின் கோவா மறைமாவட்ட கார்மேல் சீர்திருத்த துறவற சபையின் மாகாண முதல்வர் அருட்தந்தை சாள்ஸ் செராவ் அவர்கள் யாழ். மறைமாவட்டத்திற்கு விஜயம் மேற்கொண்டு ஆயருடனான சந்திப்பொன்றை மேற்கொண்டிருந்தார்.
 
இச்சந்திப்பு கடந்த 7ஆம் திகதி புதன்கிழமை யாழ். மறைமாவட்ட ஆயர் இல்லத்தில் நடைபெற்றது.

By admin