கல்லறையின் கதவுகளை உடைத்தெறிந்து உயிர்த்த நம் ஆண்டவர் இயேசுக் கிறிஸ்து சமுகத்தில் நாதியற்று, வாழ வழிதெரியாது அங்கலாய்த்து நிற்போரினதும் ஏழை எளிய மக்களினதும் தேவைகளை நிறைவேற்ற எம் இதயங்களை திறந்து தனது உயிர்ப்பின் ஒளியால் எம்மையும் எம் மக்களையும் ஒளிபெற செய்வாரென யாழ். மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை யஸ்ரின் ஞானப்பிரகாசம் அவர்கள் வழங்கியுள்ள ஈஸ்டர் செய்தியில் தெரிவித்துள்ளார்.

உயிர்ப்பு என்பது பாவ மன்னிப்பைப் பற்றியது மட்டுமல்ல, மாறாக கிறிஸ்துவுடன் இறந்து உயிர்த்தெழும் ஒவ்வொரு மனிதனுடைய ஆன்மாவின் தற்காலிக மற்றும் நிலையான மாட்சியைப் பற்றியதெனவும் மேலும் அவர் இச்செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் இயேசு தனது வாழ்வாலும் வார்த்தையாலும் தந்த சிலுவையின் செய்தி சவால்மிக்கதாகும் என்பதனை சுட்டிக்காட்டி நாம் ஒவ்வெருவரும் தன்னலம் துறந்து இறை திருவுளத்திற்கு எமை முழுமையாக சரணாகதியாக்கி நமது தீமையான சிந்தனைகள் செயற்பாடுகளுக்குள் இறந்து புதுவாழ்வுக்கு பிறக்கவேண்டுமெனவும் அழைப்புவிடுத்துள்ளார்.

 

 

By admin