யாழ் மறைமாவட்ட அன்பிய வளவாளர்களுக்கான கருத்தமர்வு 17 ஆம் திகதி கடந்த வியாழக்கிழமை யாழ். மறைக்கல்வி நடுநிலைய கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.
யாழ் மறைமாவட்ட அன்பிய ஆணைக்குழு இயக்குனர் அருட்திரு மில்பர் வாஸ் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இக்கருத்தமர்வில் யாழ் மறைமாவட்டத்தின் ஆறு மறைக்கோட்ட அன்பிய இயக்குனர்களும், மறைமாவட்ட அன்பிய வளவாளர்களும் கலந்து கொண்டனர். இக்கருத்தமர்வில் உலக ஆயர்கள் மாமன்ற தயாரிப்பு பணிகளுக்கான விளக்கவுரையினை மறைமாவட்ட அன்பிய இயக்குனர் அவர்கள் வழங்கினார். தொடர்ந்து கடந்த காலங்களில் கோவிட் 19 தாக்கத்தால் நடைமுறைப்படுத்தப்படாத செயற்பாடுகளை நடைமுறைப்படுத்தி இவ் ஆண்டிற்குரிய செயற்பாட்டு திட்டங்கள் முன்னெடுப்பாதற்கான வழிமுறைகளும் இங்கு கலந்துரையாடப்பட்டன