யாழ். மறைமாவட்ட அன்பிய ஆணைக்குழுவால் முன்னெடுக்கப்பட்ட வளவாளர்களுக்கான வதிவிட பயிற்சி கடந்த 5ம் 6ம் திகதிகளில் அகவொளி குடும்ப நல மையத்தில் இடம்பெற்றது.
யாழ். மறைமாவட்ட அன்பிய ஆணைக்குழு இயக்குனர் அருட்தந்தை டேவிட் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் யாழ். மறைமாவட்டக் குருமுதல்வர் அருட்தந்தை ஜெபரட்ணம் அவர்கள் கலந்து நிகழ்வை ஆரம்பித்து வைத்தார்.
இந்நிகழ்வில் ஆறு மறைக்கோட்டங்களில் இருந்து வளவாளர்கள் மறைக்கோட்ட அன்பிய இணைப்பாளர்கள்குருக்கள் என 40இற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
இவ்வதிவிடப் பயிற்சியில் அருட்தந்தை ரவிச்சந்திரன் மற்றும் அருட்தந்தை ஸ்ரனி அன்ரனி ஆகியோர் கலந்து சிறப்புரையாற்றினார்கள்.
இந்நிகழ்வின் முடிவில் இவ் ஆண்டிற்கான செயற்திட்டங்கள் குறித்த கலந்துரையாடலும் நடைபெற்றது.

By admin