யாழ். மரியாயின் சேனை கொமிற்சிய அலுவலகர்களுக்கும் முல்லைத்தீவு கியூரியா உறுப்பினர்களுக்குமிடையிலான சிறப்பு ஒன்றுகூடல் நிகழ்வு 30ஆம் திகதி கடந்த புதன்கிழமை முல்லைத்தீவு புனித இராயப்பர் ஆலயத்தில் நடைபெற்றது.
யாழ். மரியாயின் சேனை கொமிற்சிய ஆன்மீக இயக்குனர் அருட்தந்தை யேசுதாஸ் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் முல்லைத்தீவு கியூரியா ஆன்மீக இயக்குனர் அருட்தந்தை யூட் அமலதாஸ் மற்றும் கியூரியா, பிரசீடிய அலுவலர்கள் பங்குபற்றியிருந்தனர்.