யாழ். திருமறைக் கலாமன்றத்தினால் முன்னெடுக்கப்பட்ட பொங்கல் விழா சிறப்பு நிகழ்வு 15ஆம் திகதி கடந்த ஞாயிற்றுக்கிழமை சிறப்பான முறையில் நடைபெற்றது.
யாழ். பிரதான வீதியில் அமைந்துள்ள பிரதான அலுவலகத்தில் பொங்கல் வைபவமும் தொடர்ந்து காலை 7.00 மணிக்கு யாழ். மார்ட்டீன் வீதியில் அமைந்துள்ள கலைஞானசுரபி தியான இல்லத்தில் பண்பாட்டு திருப்பலியும். தொடர்ந்து மாலை 6.00 மணிக்கு யாழ். பிரதான வீதியில் அமைந்துள்ள திருமறைக் கலாமன்ற திறந்தவெளி அரங்கில் கலை நிகழ்வுகளும் இடம்பெற்றன.
சட்டத்தரணி ஜொணி மதுரநாயகம் அவர்களின் தலைமையில் நடைபெற்ற அரங்க நிகழ்வில் வடமாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் பிரதிப் பணிப்பாளர் ஸ்ரிமதி ராஜமல்லிகை சிவசுந்தரசர்மா அவர்கள் பிரதம விருந்தினராக கலந்து சிறப்பித்தார்.
இந்நிகழ்வில் கலைத்தூது அழகியல் கல்லூரி மாணவிகளின் நடனம், திருமறைக்கலாமன்ற இசைக் கலைஞர்களின் பொங்கல் பாடல்கள், நாடகக் கலைஞர்களின் ‘குசேலர்’ இசைநாடகம் என்பவற்றுடன் கவிஞர் கு.வீரா அவர்களின் தலைமையில் தவறாது வரும் தைமகளும், தவறாகிப் வரும் தலைமுறையும்” என்னும் தலைப்பில் சிறப்புக் கவியரங்கமும் இடம்பெற்றன.