யாழ். கரித்தாஸ் கியூடெக் நிறுவனத்தால் மகளிர் தின சிறப்பு நிகழ்வு

யாழ். கரித்தாஸ் கியூடெக் நிறுவனத்தால் “மகளிர் உரிமையை மதிப்போம்” என்னும் தொனிப்பொருளில் முன்னெடுக்கபட்ட மகளிர் தின சிறப்பு நிகழ்வு 09ஆம் திகதி கடந்த வியாழக்கிழமை யாழ். புனித மடுத்தீனார் சிறிய குருமட முன்றலில் நடைபெற்றது.
கியூடெக் கரித்தாஸ் நிறுவன இயக்குனர் அருட்தந்தை இயூஜின் பிரான்சிஸ் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் மகளிர் எதிர்கொள்ளும் சவால்கள் குறித்து விழிப்புணர்வுப்பேரணி யாழ். கியூடெக் கரித்தாஸ் நிறுவன முன்றலில் இருந்து ஆரம்பமாகி யாழ். புனித மடுத்தீனார் சிறிய குருமட முன்றலை சென்றடைந்து அங்கு நிறைவடைந்தது.
தொடர்ந்து மகளிர் தினத்தை சிறப்பிக்கும் சிறப்புரைகளும் சுயதொழில் முயற்சியை ஊக்குவிக்கும் விழிப்புணர்வுக் கண்காட்சியும் அங்கு இடம்பெற்றது.