யாழ்ப்பாணம் சிறைச்சாலை கைதிகளுக்கான வருடாந்த கிறிஸ்மஸ் கரோல் நிகழ்வு 02ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை யாழ். சிறைச்சாலையில் சிறைச்சாலை ஆன்மீகக் குருவும் புனித பத்திரிசியார் கல்லூரி அதிபருமான அருட்திரு திருமகன் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.

காலை திருப்பலியோடு ஆரம்பமான இந்நிகழ்வில் கைதிகளினால் கரோல் கீதங்கங்கள் இசைக்கப்பட்டு அவர்களுக்கான அன்பளிப்பு பொதிகளும் வழங்கிவைக்கப்பட்டன. இந்நிகழ்வில் சிறைச்சாலை அதிகாரி, கைதிகளின் புனர்வாழ்வுக்கு பொறுப்பான அதிகாரி மற்றும் அருட்சகோதரிகளும் கலந்துகொண்டனர். 500 வரையான கைதிகளுக்கு வழங்கப்பட்ட பொதிகளுக்கான அத்தியவசிய பொருட்கள் அருட்திரு திருமகன் அவர்களின் கடின முயற்சியினால் பங்குத்தளங்களுடாக மக்களிடமிருந்து பெறப்பட்டமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.

By admin