யாழ்ப்பாணம் கரித்தாஸ் கியூடெக் நிறுவனத்தின் சுற்றுச்சூழல் பாதுகாப்பு செயற்திட்டத்தின் கீழ் முன்னெடுக்கப்பட்ட சிறப்பு கலந்துரையாடல் 20ஆம் திகதி கடந்த புதன்கிழமை யாழ். கரித்தாஸ் கியூடெக் நிறுவன மண்டபத்தில் நடைபெற்றது.
நிறுவன இயக்குனர் அருட்தந்தை இயூஜின் பிரான்சிஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் யாழ்.மறைமாவட்ட குருமுதல்வர் அருட்தந்தை ஜெபரட்ணம் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் யாழ். மாவட்ட செயலர் திரு. சிவபாலசுந்தரன் அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டதுடன் யாழ். பல்கலைக்கழக பேராசிரியர் திருமதி ராஜேந்திரமணி அவர்கள் கலந்து கருத்துரை வழங்கினார்.
பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், பிரதேசசபை செயலர்கள், சுகாதார பரிசோதகர்கள், வனவள திணைக்கள உத்தியோகத்தர்கள், கடல்வள பாதுகாப்பு உத்தியோகத்தர்கள், சுற்றுச்சூழல் அதிகாரசபை உத்தியோகத்தர்கள், நீர்பாசன திணைக்கள பொறியியலாளர்கள், தேசிய நீர்வழங்கல் அதிகாரசபை உத்தியோகத்தர்கள், ஊடகவியலாளர்கள், கிராம சமூகத்தலைவர்கள் என பலரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

By admin