மல்வம் திருக்குடும்ப ஆலய பிரதேசத்தில் வாழ்ந்துவரும் 70 வயதிற்கு மேற்பட்ட மூதாளரை கௌரவித்து மகிழ்வுட்டும் நிகழ்வு 13ஆம் திகதி கடந்த ஞாயிற்றுக்கிழமை மல்வம் திருக்குடும்ப ஆலயத்தில் சிறப்பாக நடைபெற்றது.
பங்குத்தந்தை அருட்திரு லியோ ஆம்ஸ்ரோங் அவர்களின் தலைமையில் மேரி பஸ்ரியன் சமுக அபிவிருத்தி மன்றத்தின் ஏற்பாட்டில் புலம் பெயர் வாழ் மல்வம் திருக்குடும்ப ஆலய உறவுகளின் அனுசரணையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் 90 வரையான மூதாளர்கள் கலந்துகொண்டனர். இந்நிகழ்வில் இணைந்திருந்த மூதாளர்கள் தங்களின் வாழ்வியல் அனுபவங்களை பகிர்ந்து கொண்டதுடன் அங்கு நடைபெற்ற மகிழ்வூட்டும் நிகழ்வுகளில் ஆர்வமுடன் கலந்து கொண்டமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.