முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு றோ.க வித்தியாலத்தில் 2022ஆம் ஆண்டு புலைமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களுக்கும் 100க்கு அதிகமான புள்ளிகளைப் பெற்ற மாணவர்களுக்குமான கௌரவிப்பும் பரிசளிப்பு நிகழ்வும் 14ஆம் திகதி வியாழக்கிழமை பாடசாலை அதிபர் அருட்தந்தை றொபின்சன் ஜோசப் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.

கரைத்துறைப்பற்று கோட்டக்கல்வி பணிப்பாளர் திரு. சிறிபுஸ்பநாதன் அவர்கள் பிரதம விருந்தினராகவும் முல்லைத்தீவு மறைக்கோட்ட முதல்வர் அருட்தந்தை அன்ரனிப்பிள்ளை, புதுக்குடியிருப்பு கோட்டக்கல்வி பணிப்பாளர் திரு. பாஸ்கரன், யாழ். புனித வளனார் அச்சக முகாமையானர் அருட்தந்தை றொசான் மற்றும் லயன் கழக உறுப்பினர் தேசகீர்த்தி ஜெயதாஸ் நிர்மலகாந்தன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகவும் இந்நிகழ்வில் கலந்து சிறப்பித்துடன் அருட்தந்தையர்கள், அருட்சகோதரிகள், ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.

By admin