முதியோர் தினத்தை முன்னிட்டு குளமங்கால் பங்கில் முன்னெடுக்கப்பட்ட சிறப்பு நிகழ்வு 1ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
பங்குத்தந்தை அருட்தந்தை பாஸ்கரன் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் குளமங்கால் புனித சவேரியார் ஆலயத்திலும் மல்லாகம் புனித சதாசகாய அன்னை ஆலயத்திலும் காலை சிறப்பு திருப்பலிகள் ஒப்புக்கொடுக்கப்பட்டு முதியோர்களுக்கான கௌரவிப்பு நிகழ்வுகளும் நடைபெற்றன.
தொடர்ந்து அன்று மாலை புனித சவேரியார் ஆலய முன்றலில் முதியோர் ஒன்றுகூடலும் மகிழ்வூட்டும் நிகழ்வுகளும் இடம்பெற்றன.

By admin