யாழ். மறைமாவட்ட மறைநதி கத்தோலிக்க ஊடக மையம் ஆரம்பிக்கப்பட்;டதன் முதலாம் வருட சிறப்பு நிகழ்வு 27ஆம் திகதி கடந்த ஞாயிற்றுக்கிழமை அங்கு நடைபெற்றது. மறைநதி கத்தோலிக்க ஊடக மையத்தில் அமைந்துள்ள ஆயர் ஜஸ்ரின் கலையகத்தில் இயக்குனர் அருட்தந்தை அன்ரன் ஸ்ரிபன் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் யாழ். மறைமாவட்டக் குருமுதல்வர் அருட்தந்தை ஜெபரட்ணம் அவர்கள் பிரதம விருந்தினராகவும், ஊடகவியலாளரும் குறும்பட இயக்குனருமாகிய திரு. மதிசுதா அவர்கள் சிறப்பு விருந்தினராகவும் கலந்து சிறப்பித்தார்கள்.

இந்நிகழ்வில் இவ்வூடகத்தோடு சேர்ந்து சேவையாற்றிவரும் சேவையாளர்கள் கௌரவிப்பு நிகழ்வும் இடம்பெற்றது. கத்தோலிக்க ஊடக மையம் தனக்கென்று தனித்துவமான கட்டிடத்தில் இயங்க ஆரம்பித்து ஏராளமான பணிகளை ஆற்றிவருவதுடன் பலரும் தங்களால் இயன்ற உதவிகளை இதற்கு வழங்கி வருகின்றனர்.

By admin