யாழ்ப்பாணம் புனித பத்திரிசியார் கல்லூரியில் புதிதாக நிர்மாணிக்கப்படவுள்ள மாணவர் விடுதியின் கட்டிடத்திற்கான அடிக்கல் நாட்டும் விழா கல்லூரி அதிபர் அருட்திரு திருமகன் அவர்கள் தலைமையில் 15ஆம் திகதி கடந்த செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

கல்லூரியின் அதிபர் தினத்தன்று ஆசிரியர்கள், மாணவத் தலைவர்கள், பழைய மாணவர்கள், நலன்விரும்பிகள் பங்குபற்றலுடன் நடைபெற்ற இந்நிகழ்வில் விடுதிக்கான அடிக்கல்லினை யாழ் மறை மாவட்ட குருமுதல்வர் அருட் கலாநிதி nஐபரட்ணம் அடிகளார் நாட்டினார். புனித பத்திரிசியார் கல்லூரி வடமாகாணத்தில் உள்ள ஒரேயொரு தனியார் கத்தோலிக்க பாடசாலையென்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

By admin