மல்லாகம் புதுமை மாதா ஆலய வருடாந்த திருவிழா பங்குத்தந்தை அருட்தந்தை பாஸ்கரன் அவர்களின் தலைமையில் 10ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
திருவிழா திருப்பலியை யாழ். மறைமாவட்ட குருமுதல்வர் அருட்தந்தை ஜெபரட்ணம் அவர்கள் தலைமைதாங்கி ஒப்புக்கொடுத்தார்.திருவிழா திருப்பலி நிறைவில் அன்னையின் திருச்சொருப பவனியும் ஆசீர்வாதமும் இடம்பெற்றன.
தொடர்ந்து குளமங்கால் பங்கைச் சேர்ந்த உயர்தரப் பரீட்சையில் சிறந்த பெறுபேறு பெற்ற மாணவர்களுக்கான கௌரவிப்பு நிகழ்வும் நடைபெற்றது.