தேயிலைதோட்ட வேலைக்காக மலையக மக்கள் இலங்கைக்கு கொண்டுவரப்பட்டதன் 200ஆவது ஆண்டை நினைவுகூர்ந்து இலங்கை தேசிய கிறிஸ்தவ மன்றத்தின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்ட சிறப்பு நிகழ்வு யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது.
மலையக மக்களின் வாழ்வியல் சவாலை வெளிப்படுத்தும் மலையக மக்களின் கலை வெளிப்பாடாக ‘புறக்கணிக்கப்பட்ட மலைகள்’ என்ற தலைப்பில் கிசோகுமாரின் புகைப்படக் கண்காட்சியும் ‘தேயிலைச்சாயம்’ என்னும் தலைப்பில் மாற்றுக் கொள்கைகளுக்கான நிலையத்தின் புகைப்பட கண்காட்சியும் 23ஆம் திகதி முதல் 25ஆம் திகதி வரை யாழ்ப்பாணத்தில் உள்ள ரிம்மர் மண்டபத்தில் நடைபெற்றது.
மேலும் யாழ்ப்பாணம் கலைத்தூது கலையகத்தில் 25ஆம் திகதி கடந்த ஞாயிற்றுக்கிழமை 3 மணிக்கு டிக்கோயா நுண்கலைக் கல்லூரி வழங்கும் நாட்டிய நாடகம் மற்றும் பொதுக்கூட்டம் என்பனவும் இடம்பெற்றன.

By admin