1

மறைமாவட்ட குருக்களின் வருடாந்த தவக்காலத் தியானம் 16. 3. 2017 வியாழக்கிழமை அன்று சில்லாலையில் நடைபெற்றது. இவ்வருடம் தூய யோசவ் வாஸ் ஆண்டாக இலங்கைத் திருச்சபை பிரகடனப்படுத்தப்பட்டுள்ள நிலையில் எமது மறைமாவட்டத்திலும் அவரை நினைவுகூரும் விதமாக அவருடைய திருத்தலம் சில்லாலையில் உருவாக்கப்படுகிறது.

ஆகவே அதை நினைவுகூரும் விதமாக இவ்வாண்டிற்கான மறைமாவட்ட குருக்களுக்கான தவக்காலத் தியானம் சில்iலாலையில் ஒழுங்குசெய்யப்பட்டது.
அவருடைய திருத்தலம் உயர்த்தப்படும் இடத்தில் திருச்செபமாலையுடன் ஆரம்பமாகியது. தியான உரையை அருட்தந்தை ஜீவாப்பேல் அமதி அவர்கள் வழங்கினார்.
தொடர்ந்து தூய கதிரை மாதா ஆலயத்தில் நற்கருணை ஏழுந்தேற்றமும், பாவசங்கீர்த்தன அருட்சாதனமும், நற்கருணை ஆசீர்வாதமும் நடைபெற்றது.
அதனைத் தொடர்ந்து யாழ் மறைமாவட்ட குருக்கள் ஒன்றியத்திற்கான புதிய நிர்வாகத் தெரிவு நடைபெற்றது.
புதிய ஆண்டிற்கான குருக்கள் ஒன்றியத் தலைவராக அரட்தந்தை டேவிட் அவர்கள் தெரிவுசெய்யப்பட்டார். செயலாளராக அருட்தந்தை லீயோ ஆம்ஸ்ரோங் அவர்கள் தெரிவுசெய்யப்பட்டார். உபதலைவராக அருடத்ந்தை தயாபரன் அவர்கள் தெரிவுசெய்யப்பட்டார்.
இவ்வாறாக புதிய குருக்கள் ஒன்றிய நிர்வாகமத்தின் வழிநடத்தலில் இவ்வாண்டிற்கான கூட்டம் நடைபெற்றது.

12  IMG_3815

IMG_3816

By admin