இந்துமத சகோதரர்களின் விஜய தசமி தினத்தை முன்னிட்டும், பருவ மழை காலத்தினையையும் கருத்தில் கொண்டு, வேலனை பிரதேச செயலகத்தால் பொது இடங்களில் மரக்கன்றுகள் நாட்டும் நிகழ்வு முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. இச்செயற்பாட்டின் ஒரு அங்கமாக கடந்த 15ஆம் திகதி வெள்ளிக்கிழமை வேலனை பிரதேசத்தில் அமைந்துள்ள யாழ் திருஅவைக்கு சொந்தமான மாதா காணியில் வேலனை பிரதேச செயலரின் உதவியுடன் ஒருதொகுதி பனங்கன்றுகள் நாட்டிவைக்கப்பட்டன.

இந்நிகழ்வு சாட்டி திருத்தல பங்கின் அனுசரனையுடன் நடைபெற்றதுடன் அப்பிரதேசத்தில் அமைந்துள்ள இன்னும் சில இடங்களிலும் அன்றையதினம் இந்நிகழ்வுகள் முன்னெடுக்ப்பட்டுள்ளன. இக்கற்பர தருக்கள், தீவகத்தின் அடையாளமமாக அமைந்துள்ளதுடன் தமிழ; மக்களின் பூர்வீக அடையாளமாகவும் அமைந்துள்ளன.

By admin