மன்னார் மாவட்ட கரித்தாஸ் வாழ்வுதய நிறுவனத்தின் ஏற்பாட்டில் மன்னார் மாவட்ட வளங்களை பாதுகாக்கும் நோக்குடன் முன்னெடுக்கப்பட்ட சூழல் பாதுகாப்பிற்கான கவனயீர்ப்புப் போராட்டம் 14ஆம் திகதி கடந்த புதன்கிழமை நடைபெற்றது.
கரித்தாஸ் நிறுவன இயக்குநர் அருட்தந்தை செபமாலை அன்ரன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் மன்னார் கரித்தாஸ் வாழ்வுதய நிறுவன முன்றலில் ஆரம்பமாகிய இக்கவனயீர்ப்பு போராட்டம் பேரணியாக மன்னார் மாவட்ட செயலகத்தை சென்றடைந்து அங்கு கரித்தாஸ் நிறுவன இயக்குநர் அவர்களினால் மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஸ்ரான்லி டிமெல் அவர்களிடம் மன்னார் மாவட்ட வளங்களை பாதுகாப்பது தொடர்பான மகஜர் வாசித்து கையளிக்கப்பட்டது.
இப்பேரணியில் இளையோர் சூழல் பாதுகாப்பு குழுவினர் மற்றும் வாழ்வுதய நிறுவன பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

By admin