மன்னார் மறைமாவட்டத்தில் முன்னெடுக்கப்பட்ட 2024ஆம் ஆண்டிற்கான மேய்ப்புப்பணி திட்டமிடல் மாநாடு கடந்த 23, 24, 25ஆம் திகதிகளில் மன்னார் மறைமாவட்ட குடும்ப பணிகள் மற்றும் பொதுநிலையினர் நடுநிலையத்தில் நடைபெற்றது.
மேய்ப்புப்பணி திட்டமிடல் குழு செயலாளர் அருட்தந்தை கிறிஸ்ரி றூபன் பெர்னான்டோ அவர்களின் ஒழுங்குபடுத்தலில் மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை இம்மானுவேல் பெர்னான்டோ அவர்களின் தலைமையில் ‘செபம்’ என்னும் கருப்பொருளில் நடைபெற்ற இம்மாநாட்டில் இறைவேண்டல் ஆண்டில் முன்னெடுக்கப்படவுள்ள செயற்பாடுகள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டு தீர்மானங்கள் எடுக்கப்பட்டன.
அத்துடன் அருட்தந்தை ஜெராட் றொசாய்றோ, அருட்தந்தை விக்டர் சோசை, அருட்தந்;தை யூட் குருஸ் மற்றும் அருட்தந்தை அந்தோனிதாஸ் டலீமா ஆகியோர் வளவாளர்களாக கலந்து செபவாழ்வை ஆழப்படுத்தல் தொடர்பான கருத்துரைகள் வழங்கியதுடன் குழு ஆய்வுகளும் இடம்பெற்றன.
இந்நிகழ்வில் அருட்தந்தையர்கள், அருட்சகோதரிகள், பொதுநிலையினர் என பலரும் கலந்து கொண்டனர்.

By admin

You missed

யாழ். மறைமாவட்ட மறைநதி கத்தோலிக்க ஊடக மையத்தில் வளவாளராக பணியாற்றும் ஈழத்து இயக்குனர் திரு. மதிசுதா அவர்களின் சகோதரன் திரு. சுரேந்திரராஜா சாந்தன் அவர்கள் இந்திய பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சந்தேகத்தின்பேரில் கைதுசெய்யப்பட்டு 33 வருடங்கள் சிறைததண்டனை அனுபவித்து தொடர்ந்து அங்கிருந்து விடுவிக்கப்பட்டு சிறப்பு முகாமில் அடைக்கப்பட்டிருந்த நிலையில் அங்கு நோயுற்று 28ஆம் திகதி புதன்கிழமை இறைவனடி சேர்ந்துள்ளார். இவரது குடும்பத்தினரின் முயற்சியால் இவர் இந்தியாவிலிருந்து 28ஆம் திகதி மாலை நாடு திரும்ப இருந்த நிலையில் அன்றைய தினம் அதிகாலை மாரடைப்பால் மரணத்தை தழுவிக்கொண்டார். இவரின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவிப்பதுடன் இவரின் ஆன்மா இறைவனில் அமைதிபெற மன்றாடுவோம்.