மன்னார் மறைமாவட்ட கத்தோலிக்க இளையோர் ஆணைக்குழுவின் அனுசரணையில் வஞ்சியங்குளம் பங்கு கத்தோலிக்க இளையோர் ஒன்றியத்தினரின் ஒழுங்குபடுத்தலில் மன்னார் மறைமாவட்ட பங்கு இளையோர்களிடையே முன்னெடுக்கப்பட்ட மின்னொளியிலான கரப்பந்தாட்ட போட்டிகள் கடந்த 07ஆம் 08ஆம் திகதிகளில் புதுக்கமம் கரப்பந்தாட்ட மைதானத்தில் நடைபெற்றன.
மன்னார் மறைமாவட்ட கத்தோலிக்க இளையோர் ஆணைக்குழு இயக்குனர் அருட்தந்தை விக்டர் சோசை அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை இம்மானுவேல் பெர்னாண்டோ அவர்கள் பிரதம விருந்தினராகவும் குருமுதல்வர் அருட்தந்தை கிறிஸ்துநாயகம் அவர்கள் கௌரவ விருந்தினராகவும் முருங்கன் மறைக்கோட்ட முதல்வர் அருட்தந்தை யூட்குரூஸ், வஞ்சியங்குளம் பங்குத்தந்தை அருட்தந்தை அலெக்ஸ்சாண்டர் சில்வா, டிவைன் மேர்சி தியான இல்ல இயக்குநர் அருட்தந்தை சஜீ ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகவும் கலந்து கொண்டனர்.
மன்னார் மறைமாவட்ட பங்குகளை சேர்ந்த 14 கரப்பந்தாட்ட இளையோர் அணிகள் பங்குபற்றிய இப்போட்டிகளில் 200க்கும் அதிகமான இளையோர் இணைந்து கொண்டதுடன் தோட்டவெளிப்பங்கு இளையோர் ஒன்றியம் முதலாம் இடத்தை பெற்றுக்கொண்டது.

By admin