மன்னார் மறைமாவட்ட இளையோர் ஆணைக்குழுவின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்ட செபமாலை பேரணி 28ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இளையோர் ஆணைக்குழு இயக்குநர் அருட்தந்தை விக்டர் சோசை அவர்களின் ஏற்பாட்டில் வணக்கமாத சிறப்பு நிகழ்வாகவும் இளையோரை செபமாலை பக்தி முயற்சியில் ஊக்குவிக்கும் முகமாகவும் முன்னெடுக்கப்பட்ட இப்பேரணியில் மன்னார், மடு, முருங்கன் ஆகிய மறைக்கோட்ட பங்குகளிலிருந்து 500க்கும் அதிகமான இளையோர் பங்குபற்றினார்கள்.
மன்னார் புனித செபஸ்ரியார் பேராலயத்திலிருந்து ஆரம்பமாகிய இச்செபமாலை பேரணியில் இளையோர்கள் அன்னையின் திருச்சொருபத்தை தாங்கிய வண்ணம் செபமாலை செபித்துக்கொண்டு பள்ளிமுனை புனித லூசியா ஆலயத்தை வந்தடைந்து அங்கு நடைபெற்ற சிறப்பு நற்கருணை ஆராதனையில் பங்குபற்றினர்.

By admin