மண்டைதீவு புனித பேதுருவானவர் ஆலய 125ஆவது யூபிலி ஆண்டை முன்னிட்டு மண்டைதீவு பிரதேசத்தில் பங்கு மக்களால் பல செயற்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. இச்செயற்பாடுகளின் ஒரு அங்கமாக மண்டைதீவு பிரதேசத்தில் “முதியோர் மகிழ்வகம்” ஒன்று அமைப்பதற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு 31.08.2021 கடந்த செவ்வாய்க்கிழமை அங்கு இடம்பெற்றது. மண்டைதீவு பங்குத்தந்தை அருட்திரு. டேவிற் அவர்களால் இக்கட்டடத்திற்கான அடிக்கல் நாட்டப்பட்டது. மண்டைதீவு திருஅவையின் விசுவாச வாழ்வுக்கான அடித்தளத்தையிட்டு பிரதேசத்தின் முன்னேற்றத்திற்கு பக்காலமாக இருந்த இப்பங்கின் மூத்தோரை கௌரவிப்பதற்காகவும் மாலை நேரங்களில் அவர்கள் ஒன்று கூடி ஓய்வு நேரத்தை மகிழ்வுடன் கழிப்பதற்காகவும் இம்மகிழ்வகம் அமைக்கப்படவுள்ளது. இம்மகிழ்வக கட்டிடத்திற்கான நிதி உதவியை அவுஸ்ரேலியாவில் வாழ்ந்து வரும் இப்பங்கைச்சார்ந்த ஒருவர் வழங்க முன்வந்துள்ளமை குறிப்பிடதக்கது.

By admin