மாணவர்களுக்கு தமிழ் மொழி மீதான ஆர்வத்தை அதிகரிக்குமுகமாக மன்னார் மாவட்ட VMCT கலைமன்றத்தினால் முன்னெடுக்கப்பட்ட மணி மாஸ்ரர் திருக்குறள் மனனப்போட்டி அண்மையில் நடைபெற்றுள்ளது.
மன்னார் மாவட்டத்தின் இரண்டு கல்வி வலயத்திலுள்ள பாடசாலை மாணவர்களுக்கிடையே பாடசாலை, கோட்ட, வலய, மாவட்ட மட்டங்களில் மூன்று பிரிவுகளில் கட்டம் கட்டமாக நடைபெற்ற இப்போட்டிகளின் இறுதிப்போட்டி VMCT கலைமன்ற பொதுமண்டபத்தில் 19ஆம் திகதி சனிக்கிழமை நடைபெற்றது.
இறுதிப்போட்டியில் 3 பிரிவுகளில் இருந்தும் 40 மாணவர்கள் மிகவும் ஆர்வத்துடன் பங்குபற்றியிருந்தார்கள்.
VMCT நிறுவன இயக்குனர் திரு. விமலேஸ்வரன் அவர்களின்ஏற்பாட்டில் இப்போட்டிகள் சிறப்பான முறையில் நடைபெற்றன.