இறைவேண்டல் ஆண்டை முன்னிட்டு யாழ். புனித அடைக்கல அன்னை ஆலயத்தில் பங்குத்தந்தை அருட்தந்தை ஆனந்தகுமார் அவர்களின் வழிகாட்டலில் முன்னெடுக்கப்பட்ட மகாஞான ஒடுக்கம் கடந்த 16ஆம் திகதி ஆரம்பமாகியது.

இம்மகாஞான ஒடுக்க ஆன்மீக புதிப்பித்தல் நிகழ்வை இந்தியாவிலிருந்து வருகைதந்த இரட்சகர் சபையை சேர்ந்த அருட்தந்தையர்கள் மற்றும் அருட்சகோதரர் வழிநடத்தியதுடன் இந்நிகழ்வில் இல்லத்தரிசிப்பு, சிறப்பு வழிபாடுகள், திருப்பலி, நற்கருணை வழிபாடு, தனிநபர் ஆசீர்வாதம் ஒப்புரவு அருட்சாதனம் போன்ற ஆன்மீக செயற்பாடுகளும் முன்னெடுக்கப்பட்டன.

சிறுவர், இளையோர், அன்னையர், தந்தையர்களுக்கென பல தளங்களில் நடைபெற்றுவரும் இவ் ஆன்மீக புதுப்பித்தல் மகா ஞான ஒடுக்கத்தில் ஆலய மக்கள் ஆர்வத்துடன் பங்குபற்றிவருவதுடன் 23ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற சிறப்புத்திருப்பலியுடன் இது நிறைவடைந்தது.

By admin